சென்னையில் இதுவரையில்லாத அளவுக்கு 1,407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோன்று டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கையும் இன்று கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,372 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,407 பேருக்கு கொரோன பாதிப்ப உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27, 398 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் மொத்தம் 20 ஆயிரத்து 705 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் குணம் அடைந்தவர்களின் விகிதம் 53 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 0.90 சதவீதமாகவும் உள்ளது.
தமிழகத்தில் 12 வயதுக்கு உட்பட்டவர்களில் 1,999 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து 12-வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது வரையில் 23,981 ஆண்கள், 14,718 பெண்கள் மற்றும் 17 திரு நங்கைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 349 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 12 நாட்களாக பலி எண்ணிக்கை இரட்டை இலக்கமாக இருந்து வருகிறது.
சென்னையில் இதுவரையில்லாத அளவுக்கு 1,407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.