This Article is From May 26, 2020

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

"சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்."

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

"விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது."

ஹைலைட்ஸ்

  • தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
  • பல மாவட்டங்களில் இன்று அனல் காற்றும் வீசக்கூடும்
  • வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் தெரிவிக்கையில், ‘தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருபத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து அனல் காற்று வீசக்கூடும் என்பதனால் அடுத்து வரும் 2 தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொது மக்கள் முற்பகல் 11:30 முதல் 3:30 வரை திறந்த வெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். 

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்ஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்ஸையும் ஒட்டி இருக்கும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

.