டெல்லியில் மோசனமான வானிலை நிலவரம் காரணமாக விமான சேவைகள் பாதிப்பு(Representational)
New Delhi: டெல்லியில் மோசனமான வானிலை நிலவரம் காரணமாக புறப்பட இருந்த 11 விமானங்களும், டெல்லிக்கு வர இருந்த 8 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச (IGI) விமான நிலையத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக குறைந்தது ஐந்து விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன, வெள்ளிக்கிழமை காலை 12 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவு காரணமாக ஐந்து விமானங்கள் காலை முதல் திருப்பி விடப்பட்டுள்ளன, மேலும் 12 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன" என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.
மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்தில் விமான பயண நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புறப்படுதல்கள் மற்றும் தரையிறக்கங்கள் தொடர்ந்தாலும், சில விமானங்கள் குழு செயல்பாட்டு வரம்புகள் காரணமாக பாதிக்கப்படுகின்றன.