This Article is From Apr 11, 2020

ரூ. 500-க்கு 19 மளிகைப் பொருட்கள்... ரேஷன் கடைகள் மூலம் விற்க தமிழக அரசு முடிவு

மக்கள் கூடுவதை தடுக்கவும், அத்தியாவசிய பொருட்கள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்யவும் ரேஷன் கடைகள் மூலம் மளிகைப் பொருள்களை வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது.

ரூ. 500-க்கு 19 மளிகைப் பொருட்கள்... ரேஷன் கடைகள் மூலம் விற்க தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் 911 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகள் மூலம் ரூ. 500-க்கு மளிகை பொருள் தொகுப்பை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 911 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் நடமாடும் காய்கறிக்கடைகள் செயல்படுகின்றன.

இந்த நிலையில், மக்கள் கூடுவதை தடுக்கவும், அத்தியாவசிய பொருட்கள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்யவும் ரேஷன் கடைகள் மூலம் மளிகைப் பொருள்களை வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது.

இதன் படி ரூ. 500-க்கு 19 வகையான மளிகைப் பொருட்களை அரசு வழங்கவுள்ளது. வெளிச்சந்தையில் இதன் மதிப்பு ரூ. 597 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மளிகைப் பொருள் தொகுப்பில் இடம்பெறும் பொருட்களின் பட்டியல் -

na555gmg
.