கிரேன் மூலமாக எரியும் கட்டடத்திலிருந்து மக்களை மீட்கும் காட்சி.
19 வயது இளைஞன் எரியும் கட்டடத்தில் சிக்கியிருந்த 14 பேரை காப்பாற்றியது பாராட்டப்படுகிறது. சீனாவின் புஷன் நகரில் லியோனிங் நகரில், லான் ஜூன்ஸ்ஸே ஒரு கட்டுமானத் தளத்தில் பணி புரிகிறார்.
அருகில் உள்ள கட்டிடம் தீப்பிடித்து எரிந்த போது ஜுன்ஸ் உடனடியாக மக்களைக் காப்பாற்ற கிரேனை இயக்கி மக்களை காப்பாற்றியுள்ளார். ஒரு செல் தொலைபேசியில் க்ரேனை இயக்கி காப்பாற்றும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எரிந்து கொண்டிருக்கும் கட்டிடத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றுவதற்காக அவர் கிரேனை இயக்குவது காட்டப்படுகிறது. அவரின் வீரம் பதட்டமான சூழலிலும் விரைவாக சிந்தித்து 30 நிமிடங்களில் 14 பேரைக் காப்பாற்றியுள்ளார்.
கீழே உள்ள வீடியோவைக் காணலாம்.
அந்த நேரத்தில் “ மக்களை எப்படி காப்பாற்றலாம் என்பதை மட்டுமே யோசித்தேன்” என்று கூறுகிறார் ஜுனஸ்
ஜின்ஸின் சமயோசித்தனத்தை சமூக வலைதளங்களில் மக்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Click for more
trending news