2.0 படத்தின் ஒரு காட்சி (courtesy Instagram)
New Delhi: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 படம் பாலிவுட்டில் மட்டும் 100 கோடி வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த வாரம் வியாழன் அன்று 2.0 ரிலீசானது. படம் வெளியான 5 நாட்களில் வசூல் ரூ.111 கோடி வசூலித்துள்ளதாக வர்த்தக் ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார். அக்ஷய் குமார் நடித்த படங்களிலே மிக அதிக வசூலை எட்டிய திரைப்படமாக 2.0 உள்ளது. கடந்த வார இறுதியில் 60 கோடியை எட்டிய
திரைப்படம் நிலையில் திங்கள் கிழமை வசூலுடன் 111 கோடியை எட்டியுள்ளது.
வியாழன் -20.25 கோடி
வெள்ளி - 18 கோடி
சனி -25 கோடி
ஞாயிறு -34 கோடி
திங்கள் -13.75 கோடி மொத்தம் 111 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது.
தாரன் ஆதர்ஷ் தன் கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிந்திருந்தார். வேலை நாளான திங்கள் கிழமையிலும் 2.0விற்கு வசூல் டபுள் டிஜிட்டை அடைந்து பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்திருந்தார்.
திங்கள் கிழமைக்கு முன் ஆதர்ஷ் 2.0விற்கு திங்கள் கிழமை வசூல் சிரமம் என்றே பதிவிட்டிருந்தார். 2.0விற்கு உண்மையான சோதனை திங்கள் கிழமைதான் உண்டு எனத் தெரிவித்திருந்தார்.
2.0வின் ஹிந்தி வெர்சன் வெளியீட்டு உரிமத்தை கரண் ஜோகர் தர்மா புரடெக்ஷன் பெற்றிருந்தது. படத்தின் வெற்றியை ட்விட்டரில் பதிவு செய்திருந்தது.
இயக்குநர் ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அக்ஷய் குமார் வில்லனாக நடித்திருந்தார். 500 கோடி செலவில் படம் உருவாக்கப்பட்டதாக தெரிவித்திருந்தனர். படம் வெளியாவதற்கு முன்பே 370 கோடி சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் மூலமாக வசூலை பெற்றது 2.0.