This Article is From Aug 09, 2019

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 2,500 பேர் வெளியேற்றப்பட்டனர்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 91 செ.மீ மழை பெய்தது. அடுத்த 5 நாட்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில்  2,500 பேர் வெளியேற்றப்பட்டனர்

36 மருத்துவ குழுக்கள், 30 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

Chennai:

கடந்த 24 மணி நேரமாக பெய்த கனமழையைத் தொடர்ந்து தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் 2,500க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு கூடுதல் தேசிய பேரிடர் மேலாணமை குழுக்கள் இப்பகுதியில் தேடல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளியேற்றப்பட்டவர்கள் பெரும்பாலும் அவலாஞ்சி மற்றும் கூடலூர் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ளவர்கள் தான். தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் கூடுதல் குழுவினை அமைச்சர் உதயகுமார் கோரியுள்ளதாகவும் அமைச்சர் நிவாரண மற்றும் மீட்பு பணிகளை மேற்பார்வையிடுவதாகவும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

கூடுதல் தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள் இன்று பிற்பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறந்தவர்களில் நான்கு பேர் பெண்கள்  இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். சுவர் இடிந்து 65 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சம் வழங்குவதாக தெரிவித்துள்ளார். 

012gfbr8

என்.டி.ஆர்.எஃப் மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப் மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த 491 பேர் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட 1704 பேர் 28 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் பிற வசதிகள் வழங்கப்படுகின்றன.

36 மருத்துவ குழுக்கள், 30 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 

நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. கூடலூர் மற்றும் அவலான்ஞ்சியில் மின்சாரம் தடைபட்டுள்ளது. மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. சாலைகள் சேதமடைந்துள்ளன.

தொடர்ந்து பெய்த கனமழையினால் நிலச்சரிவு ஏற்படலாம் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மாநில அரசு மீட்பு பணிகளுக்கு விமானப் படையின் உதவியை கோரியுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 91 செ.மீ மழை பெய்தது. அடுத்த 5 நாட்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

.