குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ. 4,000 முதல் ரூ. 6,000 வரைகொடுத்துள்ளனர் என்று ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
Chennai: சென்னையில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இரண்டு குழந்தைகள் உட்பட 6 பிணை தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட குழந்தைகள் ஒடிஸாவைச் சேர்ந்தவர்கள் அவர்களை பணிக்கு அமர்த்த அவர்களின் பெற்றோர்கள் முன்கூட்டியே பணத்தை பெற்றுள்ளனர். குழந்தைகள் மனிதாபிமானமற்ற சூழ்நிலையில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று சோதனையில் காவல்துறைக்கு உதவிய ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ. 4,000 முதல் ரூ. 6,000 வரைகொடுத்துள்ளனர் என்று ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
சிறுவர்கள் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வேலை செய்யும்படி கட்டாயப்பட்டுத்தப்பட்டுள்ளனர். தண்ணீரை சுத்தம் செய்ய ஆபத்தான ராசயணங்களை பயன்படுத்தச் செய்துள்ளனர்.
குழந்தைகளின் கைகளும் கால்களிலும் கீறல்கள் மற்றும் காயங்கள் உள்ளன. சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.