கடத்தப்பட்ட சால்வைகளின் சந்தை மதிப்பு ரூ.45லட்சம் வரும் என தெரிகிறது.
New Delhi: லடாக் மற்றும் திபெத்திய பகுதிகளில் கிடைக்கும் ஷாட்டூஷ் சால்வையானது திபெத்திய மான் முடியிலிருந்து நெய்யப்பட்ட சால்வையாகும். டெல்லியில் இருந்து ஷாங்காய்க்கு விமானம் மூலம் செல்ல இருந்த 41, 39 வயதுடைய இரண்டு பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அந்த பெண்களின் உடமைகளை சோதனை செய்ததில் 15 ஷால்வைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஷாட்டூஷ் சால்வை கடத்த முயற்சி செய்ததாக அந்த 2 பெண்களும் சுங்கத்துறை அதிகாரிளால் கைது செய்யப்பட்டனர். சர்வதேச அளவில் இந்த பொருட்களை விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட அந்த சால்வைகளின் மதிப்பு ரூ.45லட்சம் இருக்கும் என தெரிகிறது.
இந்த திபெத்தியன் கலைமானுக்கு, இந்தியாவில் அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதனை பாதுகாக்க சர்வதேச அளவில் வனத்துறை விதிமுறைகளும் உள்ளன.