ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஹசரத் நிசாமுதினை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழந்தது.
Jhabua, Madhya Pradesh: ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மத்திய பிரதேசத்தின் ஜாபுவா மாவட்டத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது ரயில்வே கேட் ஒன்றை தாண்டி மிக வேகமாக வந்த லாரி ரயில் மீது மோதியது. இதில் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவர்கள் கூறினார்கள்,
இச்சம்பவம் காலை 6.30லிருந்து 6.45க்கு இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்துள்ளது. தண்ட்லா மற்றும் மேக்நகர் ரயில் நிலையங்களுக்கு இடைபட்ட சாஜிலி ரோட்டில் மூடப்பட்டிருந்த ரயில் கிராஸிங்கில் வேகமாக வந்த லாரி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மீது மோதி இரண்டு ரயில் பெட்டிகளை தடம் புரளச் செய்தது என்று ஜாபுவா மாவட்ட காவல் காண்காணிப்பாளர் மகேஷ் சந்திர ஜெயின் கூறினார்.
ராட்லம் பகுதி ரயில்வே மேலாளார் கூறுகையில், ரயில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ராஜதானி எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்திலிருந்து ஹசரத் நிசாமுதினை நோக்கி சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்தது. ரயிலின் பி7 மற்றும் பி8 பெட்டிகள் தடம்புரண்டன. பின் பயணிகளுக்கு வேறு பெட்டிகளில் இடம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் பயணத்தை தொடங்கியதாக தெரிவித்தார்.
ரயில் மீது மோதிய மணல் லாரி பெருத்த சேதமடைந்தது. குஜாரத் பதிவு எண்ணைக் கொண்ட அந்த லாரியை ஓட்டி வந்த நபர் சலீம்(35) வதோரா மாவட்டத்தை சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.