This Article is From Jan 07, 2019

10 தொழிற்சங்கங்கள் நடத்தும் பாரத் பந்த் : 2 நாட்களுக்கு ஸ்தம்பிக்குமா இந்தியா?

பெரும்பாலான மத்திய மாநில அரசு ஊழியர்களின் சங்கங்கள் ஆதரவு தெரிவிப்பதால், 2 நாட்கள் நடைபெறும் பாரத் பந்த் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
இந்தியா Posted by

மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறது என்று குற்றம்சாட்டி, மத்திய தொழிற்சங்கங்கள் ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இந்த போராட்டத்தில் இடதுசாரிஅமைப்புகள், விவசாய அமைப்புகளும் இணைந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரு தினங்களிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களை நடத்துவதற்கு போராட்ட அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

பிரதமர் மோடியின் அரசு விவசாயிகளின் பிரச்னைகளை தீர்ப்பதில் தோல்வி அடைந்து விட்டதாக போராட்ட அமைப்புகளின் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

Advertisement

ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யூ. உள்பட மொத்தம் 10 அமைப்புகள் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
இவற்றுக்கு மத்திய மாநில அரசு ஊழியர்களின் சங்கங்கள், வங்கி ஊழியர்கள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதனால் இந்த பந்த் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகளால் விவசாயிகள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை கண்டித்து 2 நாட்கள் பாரத் பந்த் நடைபெறும் என்றும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளவர்கள் தெரிவித்தனர்.

Advertisement
Advertisement