Read in English
This Article is From Aug 23, 2019

West Bengal Stampede: மேற்கு வங்க கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் 2 பேர் பலி 20 பேர் படுகாயம்

West Bengal Stampede: தற்போது மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இறந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

Advertisement
இந்தியா Translated By

Bengal Stampede: இரண்டு பேர் இறந்து விட்டனர். பலர் காயமடைந்துள்ளனர்.

Kolkata:

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில்  கோயிலில் பலத்த மழை காரணமாக மூங்கில் கட்டமைப்புகள் இடிந்து விழுந்தததில் இருவர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இன்று கச்சுவா லோக்நாத் கோயிலுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பலத்த மழை பெய்யவும் மக்கள் கோயிலுக்கு அணுகும் சாலையில் தற்காலிகமாக மூங்கில் ஸ்டால்களில் தஞ்சம் புகுந்தனர். பலத்த மழையினால் மூங்கில் கட்டமைப்புகள் இடிந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று முதல்வர் கூறியுள்ளார்.

இரண்டு பேர் இறந்து விட்டனர். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

Advertisement

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடனேயே மம்தா பானர்ஜி தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இறந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement