हिंदी में पढ़ें Read in English
This Article is From Jun 10, 2020

2 யானைகளுக்கு கோடிரூபாய் சொத்தை எழுதி வைக்கும் பாசக்கார மனிதர்! பிள்ளைபோல் வளர்ப்பதாக பேட்டி

சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் பாலக்காட்டில் பழத்தில் வெடி வைக்கப்பட்டு யானை உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சூழலில், தனது பாதி சொத்தை ஒருவர் யானைக்கு எழுதி வைக்கும் சம்பவம் பீகாரில் நடந்திருக்கிறது.

Advertisement
இந்தியா Edited by (with inputs from ANI)

யானைகளுக்கு கோடி ரூபாய் மதிப்புடைய சொத்தை எழுதி வைக்கும் அக்தர் இமாமை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

Highlights

  • பீகாரை சேர்ந்த அக்தர் இமாம் மோதி, ராணி என்ற யானைகளை வளர்த்து வருகிறார்
  • 2 யானைகள் பெயரில் தனது நிலத்தை எழுதி வைக்க முடிவு செய்துள்ளார்
  • தான் மறைந்த பின்னர் யானைகள் அனாதைகளாகி விடக்கூடாது என்கிறார் அக்தர் இமாம்
Patna:

பீகாரை சேர்ந்த  அக்தர் இமாம் என்பவர் யானைகளுக்காக அரசு சாரா நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் தான் செல்லமாக வளர்க்கும் மோதி மற்றும் ராணி என்ற யானைகளுக்காக தனது நிலத்தை அவற்றின் பெயரில் எழுதி வைக்கிறார். இதனால், யானைகள் கோடீஸ்வரர்களாக மாறப்போகின்றன.

கடந்த சில நாட்களாக யானைகள் மீதான தாக்குதல் குறித்து சோகக் கதைகளை நாம் கேட்டு வருகின்றோம். இந்த நிலையில், யானையின் மீது கொண்ட அன்பால் சொத்தையே எழுதி வைக்கும் அளவுக்கு சென்றுள்ள அக்தர் இமாமின் நடவடிக்கை நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த அக்தர் இமாம் யானைகளுக்காக அரசு சாரா என்.ஜி.ஓ. நிறுவனத்தை நடத்தி வருகிறார். அங்கு மோதி என்ற 15 வயது யானையும், ராணி என்ற 20 வயது யானையும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

தனது மரணத்திற்கு பிறகு இரு யானைகளும் அனாதைகளாக ஆகி விடக்கூடாது என்று கூறியுள்ள அக்தர் இமாம், தனது நிலத்தை யானைகள் பெயரில் எழுதி வைக்க முடிவு செய்துள்ளார்.

தான் மறைந்த பின்னர் யானைகள் அனாதைகளாக நிற்க கூடாது என்கிறார் அவற்றை வளர்க்கும் அக்தர் இமாம்.

இதுகுறித்து அக்தர் இமாம் கூறுகையில், ‘மிருகங்கள் மனிதர்களைப் போல கிடையாது. அவைகள் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவை. நான் யானைகளை பல ஆண்டுகளாக பராமரித்து வருகிறேன். நான் மரணித்த பிறகு அவைகள் அனாதை ஆகி விடக்கூடாது. அவற்றை எனது பிள்ளைகளைப் போல கவனித்து வருகிறேன். யானைகள் இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது.

Advertisement

எனது நிலத்தை மோதி, ராணியின் பெயரில் எழுதி வைக்க முடிவு செய்துள்ளோன். இவை சில கோடி ரூபாய் மதிப்பு உடையவை.

என்னை பலமுறை நான் வளர்த்த யானைகள் காப்பாற்றியுள்ளன. ஒருமுறை ரவுடிகள் என்னை கொல்ல முயன்றனர். அந்த நேரத்தில் எனது யானைகள்தான் என்னை காப்பாற்றின. என்னை கொல்வதற்காக துப்பாக்கிகளுடன் எனது அலுவலகத்திற்கு எனது எதிரிகள் வர முயன்றனர். அதுபற்றி யானைகள் முன்கூட்டியே அலெர்ட் செய்ததால் நான் தப்பித்தேன்' என்று கூறினார்.

Advertisement

யானைகளுக்கு கோடி ரூபாய் மதிப்புடைய சொத்தை எழுதி வைக்கும் அக்தர் இமாமை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் பாலக்காட்டில் பழத்தில் வெடி வைக்கப்பட்டு யானை உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சூழலில், தனது பாதி சொத்தை ஒருவர் யானைக்கு எழுதி வைக்கும் சம்பவம் பீகாரில் நடந்திருக்கிறது.

Advertisement