இறந்த 6 பேரைத் தவிர, 3 பெண்களுக்கு இந்த விபத்தினால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nagpur: மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் செவ்வாய் கிழமையன்று, ஒரே ஜீப்பில் 13 சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அந்த ஜீப் நிலை தடுமாறி ஆற்றுப் பாலத்தில் இருந்து தவறி விழுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போலீஸ் தரப்பு தகவல் தெரிவிக்கிறது.
“ஜீப் மூலம் 8 பேர்தான் பயணம் செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், 13 பேர் சென்றதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது” என்று போலீஸ் கூறுகிறது.
உயிரிழந்தவர்களில் 3 இளம் பெண்கள், சமீபத்தில்தான் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். பந்தாரா மாவட்டத்தின் கும்ப்ளி கிராமத்தில் இருக்கும் சுலுபந்த் ஆற்றுக்கு அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆற்றுப் பாலத்துக்கு மேலே சென்றபோது, வாகனத்தின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இதனால் ஜீப், பாலத்தில் இருந்து 40 அடி கீழே விழுந்துள்ளது.
இறந்த 6 பேரைத் தவிர, 3 பெண்களுக்கு இந்த விபத்தினால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 பேர் சகோலியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.