Srinagar: ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் அனந்தநாக் மாவடத்தில் நடந்த என்கவுண்டரில் 2 ஹிஸ்புல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்
ஶ்ரீநகரில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முனிவார்ட் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனை அடுத்து, தீவிரதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்
அப்போது, முனிவார்ட் பகுதியில் மறைந்து இருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதற்கு பதில் தாக்குதல் நடத்திய பாதுகாப்பு படையினர், 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.
இந்த தாக்குதலில், ஹிஸ்புல் தீவிரவாத அமைப்பை சேர்ந்த அல்தாப் என்ற பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுட்டுக் கொல்லப்பட்ட மற்றொரு தீவிரவாதியின் தகவல் கிடைக்கவில்லை.
முனிவார்ட் பகுதியில் மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கின்றனர். அதனால், என்கவுண்டர் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது என்று காஷ்மீர் காவல் துறை அதிகாரி பானி தெரிவித்துள்ளார்
இந்நிலையில், முனிவார்ட் பகுதியைச் சுற்றி இண்டர்நெட் சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது