Read in English
This Article is From Oct 01, 2018

பாக். ஹெலிகாப்டர் அத்துமீறிய விவகாரம் : தேடுதல் வேட்டையில் இந்திய ஜெட் விமானங்கள்

பாகிஸ்தான் ஹெலிகாப்டர் அத்துமீறி இந்திய எல்லைக்குள் புகுந்ததை தொடர்ந்து, இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள 2 ஜெட் விமானங்களை ராணுவம் அனுப்பி வைத்துள்ளது.

Advertisement
இந்தியா Posted by
New Delhi:

பாகிஸ்தானை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று நேற்று, இந்திய எல்லைக்குள் அத்துமீறி புகுந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டியுள்ள இந்திய எல்லையில் நடந்த இந்த சம்பவம் பாதுகாப்புத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தும் நடவடிக்கையில் ராணுவத்தினர் இறங்கினர். இருப்பினும், கண்காணிப்பு ரேடாரில் இருந்து ஹெலிகாப்டர் விலகிச் சென்று தான் வந்த இடத்தை நோக்கி திரும்பி விட்டது. 

இந்த ஹெலிகாப்டர் அத்துமீறல் எதேச்சையாக நடந்ததா அல்லது வேண்டுமென்றே உளவு பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாகிஸ்தான் ராணுவம் ஹெலிகாப்டரை அனுப்பியதா என்ற விவரம் உறுதிப்படுத்தப்படவில்லை. 

Advertisement

இந்த பிரச்னையை மிகுந்த கவனத்துடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அணுகி வருகிறது. ஹெலிகாப்டர் அத்துமீறலை தொடர்ந்து விசாரணைக்காக 2 ஜெட் விமானங்களை ராணுவம் அனுப்பியுள்ளது. அவை மிக் 21-ரகத்தை சேர்ந்தவை என ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இந்தியா - பாகிஸ்தான் எல்லை விதிகளின்படி எல்லையில் இருந்து 1 கிலோ மீட்டரை தாண்டி ஹெலிகாப்டர் உள்ளே வரக்கூடாது. சிறிய ரக ஹெலிகாப்டர்கள் 10 கிலோ மீட்டர் தூரம் வரை அனுமதி உண்டு. 

Advertisement