சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
Mumbai: வெள்ளியன்று மகாராஷ்டிராவின் பார்பானி மாவட்டத்தில் இருவர் காவலர் பணித்தேர்வுக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அதிவேகமாக வந்த கார் அவர்கள் மீது மோதியதில் இருவரும் உயிரிழந்தார்கள்.
இச்சம்பவம் மும்பையிலிருந்து 500கி.மீ தொலைவில் இருக்கும் பார்பானியின் பூர்னா பகுதியில் வெள்ளியன்று அதிகாலையில் சந்தோஷ் சபேல்(18) மற்றும் நாதுரம் சபேல் (23) உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நிகழ்ந்துள்ளது என்று காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இருவரும் வேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகிகள் கூறினர். மேலும் இருவர் விபத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.