This Article is From Dec 22, 2018

நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடி பணியிடங்கள் காலியாக உள்ளன

பிகாரில்தான் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக 53 ஆயிரமாக இருக்கிறது.

நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடி பணியிடங்கள் காலியாக உள்ளன

காலிப்பணியிட விவரத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

New Delhi:

நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த தகவலை  மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இணை அமைச்சர் விரேந்திர குமார் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

எழுத்துப்பூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில், மொத்தம் 1.09 லட்சம் அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்களும், 1.18 லட்சம் அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. நாடு முழுவதும் 12.8 லட்சம் அங்கன்வாடி பணியாளர்களும், 11.6 லட்சம் அங்கன்வாடி உதவியாளர்களும் பணியாற்றி வருகின்னறனர் என்று கூறியுள்ளார்.

காலியிடங்களை பொறுத்தவரையில் பிகாரில்ததான் அதிகபட்சமாக 53 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.