இரண்டு பேரும் பயந்து “ஜெய் ஶ்ரீராம்’ என்று சொன்னதாக குறிப்பிட்டனர்.
Aurangabad: மகராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் நகரில் அடையாளம் தெரியாத சில நபர்கள் ‘ஜெய் ஶ்ரீ ராம்' என்று கூறச் சொல்லி இரண்டு நபர்களை கட்டாயப்படுத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவுரங்காபாத்தில் நடக்கும் இரண்டாவது சம்பவமாகும். இரண்டாவது சம்பவத்தை தொடர்ந்து நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஞாயிற்றுக் கிழமை இரவு ஷேக் அமீர் ஸொமோட்டாவில் டெலிவரி செய்யும் வேலையில் இருந்து வருகிறார்.அவரின் நண்பர் ஷேக் நசீர் ஆட்டோவுக்காக காத்திருந்த வேளையில் காரில் வந்த நான்கு, ஐந்து பேர் இருவரையும் தடுத்து நிறுத்தி அவர்களின் மத அடையாளத்தை தவறாக பேசி அச்சுறுத்தியுள்ளனர். அவர்களை ‘ஜெய் ஶ்ரீராம்' என்று சொல்லாவிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
இரண்டு பேரும் பயந்து “ஜெய் ஶ்ரீராம்' என்று சொன்னதாக குறிப்பிட்டனர்.
பின் சிலர் வருவதைப் பார்த்து காரில் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் இருவரும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து அவுரங்கபாத் காவல் துறை கமிஷ்னர் “ குற்றம் சாட்டப்பட்டவர்களையும் அவர்களின் வாகனத்தையு கண்டுபிடிக்க முயற்சி எடுக்கிறோம். அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. சட்டம் ஒழுங்கை பராமரிக்க காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை, ஹோட்டல் ஊழியர், இம்ரான் இஸ்மாயில் டேல் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு “ஜெய் ஶ்ரீராம்” கட்டாயப்படுத்திய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.