ஹைலைட்ஸ்
- இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது
- இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
- இன்னொருவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது
Chennai: சென்னையில் குழந்தை கடுத்துபவர்கள் என்று சந்தேகப்பட்டு இருவர் மீது பொது மக்கள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அந்த இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து, தாக்குதலுக்கு உள்ளான இருவரில் ஒருவரை போலீஸ் கைது செய்துள்ளது. இன்னொருவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
குழந்தை கடத்தல்காரர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது சென்னை போலீஸ்.
இதைப் போன்ற ஒரு சம்பவம் மகாராஷ்டிரா, துலே பகுதியில் நடந்துள்ளது. அங்கு குழந்தை கடத்தல்காரர்கள் என்று 7 பேர் மீது சந்தேகப்பட்ட பொது மக்கள், அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால், ஐவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.