This Article is From Aug 19, 2018

கூர்க் வெள்ள இடுக்கில் இருந்து 2 மாத குழந்தையை மீட்ட வீரர்; வைரல் வீடியோ

கர்நாடகா மாநிலத்தில், வெள்ள இடுக்கில் சிக்கி இருந்த இரண்டு மாத குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர் காப்பாற்றும் வீடியோ கட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது

Kodagu, Karnataka:

கர்நாடகா: கர்நாடகா மாநிலத்தில், வெள்ள இடுக்கில் சிக்கி இருந்த இரண்டு மாத குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர் காப்பாற்றும் வீடியோ கட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

கோடகு மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 36 மணி நேரத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு, 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கோடகு மாவட்டத்திற்கு விரைந்துள்ளனர்

கனமழையால், கோடகு பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன. மேலும், நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்

aifjot5

கோடகு வெள்ள பாதிப்பு பகுதிகளில் தேவையான மருத்துவ உதவிகளுக்கு மைசூர், மண்டியா, சாமராசநகர், ஹாசன் ஆகிய மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் விரைந்துள்ளனர்.

வெள்ள பாதிப்பு நிவாரணங்களுக்கு மாநில அரசு சார்பில் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். மேலும், வெள்ள பாதிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி அளிக்க இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், தெற்கு கன்னட மாவட்டத்தில் 30 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, ஜொதுபல் கிராமத்திலிருந்து 2500 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன
 

.