This Article is From May 07, 2019

500 நாட்களுக்கு பிறகு மியான்மர் சிறையிலிருந்து விடுதலையான நிருபர்கள்!

33 வயதான வா லோன் மற்றும் 29 வயதான யா சோ ஓ இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.  செப்டம்பர் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

500 நாட்களுக்கு பிறகு மியான்மர் சிறையிலிருந்து விடுதலையான நிருபர்கள்!

அரசு தகவல்களை வெளியிட்டதற்காக அவர்கள் இருவரும் யன்கான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 

Yangon:

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இரண்டு நிருபர்கள் 500 நாட்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசு தகவல்களை வெளியிட்டதற்காக அவர்கள் இருவரும் யன்கான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 

33 வயதான வா லோன் மற்றும் 29 வயதான யா சோ ஓ இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.  செப்டம்பர் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மனித உரிமைகள் ஆணையத்தின் கேள்விகள் மற்றும் மியான்மரின் ஜனநாயக அணுகுமுறை காரணமாக அவரகள் 500 நாட்களில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிபர் வின் மியிண்ட் கடந்த மாதம் சிறைக்கைதிகள் பலரை விடுதலை செய்ய அனுமதி அளித்தார். அவர்கள் மியான்மரின் புத்தாண்டான ஏப்ரல் 17ம் தேதி விடுவிக்கப்பட்டனர். 

ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த இரண்டு நிருபர்களும் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறியுள்ளது. சிறையிலிருந்து வெளிவந்த இருவரும் மக்களை நோக்கி கைகாட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கு பல்வேறு சர்வதேச நாடுகளின் அழுத்தமும் காரணம் என்று கூறப்படுகிறது. 

வெளியே வந்த அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், தாங்கள் முதலில் தங்களது நியூஸ் ரூமுக்கு செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளனர். 

2017 டிசம்பர் மாதம் கைதான இருவரும் 10 ரொஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையில் செய்தி சேகரிக்கும் பணியை மேற்கொண்டிருந்தனர்,  7.3 லட்சம் பேர் ரொஹிங்கியாவிலிருந்து பங்களாதேஷுக்குள் குடிபெயர்ந்தனர். 

இந்த் இருவருக்கும் பத்திரிக்கை திறையின் உயரிய விருதான புலிட்சர் விருது கடந்த மே மாதம் வழங்கப்பட்டது.

மியான்மர் அரசின் செய்தி தொடர்பாளரை தொடர்பு கொண்டுதற்கு இவர்கள் குறித்த சரியான தகவல்களை வெளியிடவில்லை

ஏப்ரல் மாதம் இவர்களது மேல்முறையீட்டை மியான்மர்  உச்சநீதிமன்றம் நிராகரித்தது. போலீஸ் தாக்கல் செய்த ஆவணங்கள் சரிவர இல்லாததால் ஜனவரியில் இந்த வழக்கை ஒத்திவைத்தது.

ஏப்ரல் மாதம் நிருபர்களின் மனைவிகள் தாக்கல் செய்த கடிதத்தில் விடுதலை செய்ய கோரி கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்கள் கோரிக்கையில் குடும்பத்துடன் அவர்களை சேர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இவர்களை விடுவிப்பதற்காக மாதக்கணக்கில் மியன்மர் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. பல பத்திரிக்கையாளர்களும், புகைப்படக்காரர்களும் இவர்களின் விடுதலைக்காக காத்திருப்பதாக கூறியுள்ளனர்.

.