சிறுமிகள் ரத்தத்தால் எழுதப்பட்ட கடிதம்
Moga: பஞ்சாபை சேர்ந்த 2 சிறுமிகள் குடியரசு தலைவருக்கு தங்களது ரத்தத்தால் கடிம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் மீது பொய் வாக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், தங்களை இந்த வழக்கிலிருந்து மீட்க வேண்டும் என்றும் சிறுமிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிறுமிகள் தங்களது கடிதத்தில், ' நாங்கள் ஏமாற்றியதாக 2 பொய்யான வழக்குகள் எங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 420-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் மீது தவறு இல்லை. முறையாக விசாரிக்குமாறு காவல் துறையை கேட்டுக் கொண்டோம். ஆனால் எங்களை காவல்துறை கண்டுகொள்ளவில்லை.
எங்களுக்கு நீதி கிடைக்காவிட்டால் எங்கள் குடும்பத்தினரை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசிடம் கேட்டபோது அவர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
தீர விசாரிக்கப்பட்டதற்கு பின்னர்தான் சிறுமிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.