This Article is From Sep 10, 2018

ஐதராபாத் குண்டு வெடிப்பு: 2 பேருக்கு மரண தண்டனை அறிவிப்பு

2007 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பில் 44 பேர் உயிரிழந்தனர், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்

ஐதராபாத் குண்டு வெடிப்பில் 2 பேருக்கு மரண தண்டனை அறிவிப்பு

Hyderabad:

கடந்த 2007 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பில் 44 பேர் உயிரிழந்தனர், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குண்டு வெடிப்புக்கு காரணமான இந்தியன் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த அனீக் சையத், அக்பர் இஸ்மாயில், தாரிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், ரியாஸ், இக்பால், அமிர் ஆகிய 3 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்த வழக்கு குறித்த தீர்ப்பு கடந்த செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி வெளியானது.

அதில், இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த அனீக் சையத், அக்பர் இஸ்மாயில் ஆகியோரை குற்றவாளிகள் என ஐதராபாத் பெருநகர இரண்டாவது அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

இவர்களுக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது. குற்றவாளிகள் அனீக் சையத், அக்பர் இஸ்மாயில் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தும், இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் அளித்த தாரிக் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

.