Ahmedabad: 2002 கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது சிறப்பு விசாரணை நீதிமன்றம். சாபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்ததில் 59 பேர் உடல் கருகி பலியாகினர்.
மேலும் குற்றம்சாட்டப்பட்டிருந்த 3 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறப்பு நீதிபதி எச்.சி.வோரா, ஃபரூக் பானா, இம்ரா ஷெரு ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஹுசே சுலைமான் மோஹன், கசம் பாமேதி மற்றும் ஃபருக் தந்தியா ஆகியோர் விடுவித்துள்ளது நீதிமன்றம். இவர்கள் 5 பேரும் 2015-2016 ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
குற்றத்தில் தொடர்புடைய 8 பேர் இன்னும் தலைமறைவாக இருக்கின்றனர். முன்னதாக 2011-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி 31 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது சிறப்பு நீதிமன்றம். அதில் 11 பேருக்கு தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் கொடுக்கப்பட்டது.
அக்டோபர் 2017-ம் ஆண்டு அந்த 11 பேருக்கான தண்டனையை குறைத்து, ஆயுள் தண்டனையாக உத்தரவிட்டது.
2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரத்தில், கிட்டத்தட்ட 1000 சிறுபான்மையினர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.