காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை (Representational)
Srinagar: ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவலில், ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தின் வான்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகிய குழுக்கள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சந்தேகப்பட்ட இடங்களில் பாதுகாப்பு படை வீரர்கள் நெருங்கியபோது அப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அப்போது, பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, அந்த பகுதியில் வேறு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா என்பது குறித்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)