சிங்கத்தை கொன்று பலியான பெண்னின் உடல் மீட்கப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள வடக்கு கேரோலினாவை சேர்ந்த தனியார் வனவிலங்கு சரணாலயத்தில் சிங்கம் ஒன்று தாக்கியதில் தற்காலிகமாக பணிபுரியும் பெண் ஒருவர் பலி.
அலெக்சியாந்திரா பிளாக் என்னும் 22 வயது பெண்ணொருவர், கடந்த இரண்டு வாரமாக வடக்கு கேரோலினாவை சேர்ந்த தனியார் வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு சிங்கத்தின் வசிப்பிடத்தை சுத்தம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தனது பணியில் வழக்கத்தைப்போல் சுத்தம் செய்து வந்தபோது சிங்கம் தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
‘அந்த சிங்கம் தனது கூண்டை விட்டு எப்படி வெளியே வந்தது என தெரியவில்லை, ஆனால் கிடைத்த சிறிய இடைவேளையில் அது ஒருவரைத் தாக்கி கொன்றுவிட்டது' என அரசாங்கம் சார்பாக அறிக்கை வெளியானது.
அதைத்தொடர்ந்து சம்பவம் அறிந்து அங்கு விரைந்த போலீசார் அந்த சிங்கத்தை கொன்று அலெக்சியாந்திராவின் உடலை மீட்டனர்.
மேலும் சிங்கத்திற்கு மயக்க மருந்து கொடுத்தாகவும் அது பயனளிக்காத்தால் அதை கொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்ற கருத்தை வெளியிட்டனர். சுமார் 45 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)