This Article is From Oct 27, 2018

போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்: முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்: முதல்வர் அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டடார். அதில் தொழிலாளர்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில், பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாட ஏதுவாக 2017-18 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் இன்று இதுகுறித்து தமிழக அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஊழியர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் வழங்கப்படும் என்று இன்று அறிவித்துள்ளார்.

அதன்படி, ஒரு லட்சத்து ஆயிரத்தி 45 அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்காக அரசு 215 கோடியே 99 லட்சம் ஒதுக்கி செய்துள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கூடுதல் செலவின தொகையை ஈடுசெய்யும் வகையில் வழங்கப்படும் மானியத் தொகையை தொடர்ந்து வழங்கிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால், 1,44,045 தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

.