Read in English
This Article is From Jun 17, 2020

சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்ட 20 இந்திய ராணுவ வீரர்கள்: ராணுவத்தின் முழு அறிக்கை!

20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வத் தகவலை தெரிவித்துள்ளது.

Advertisement
இந்தியா Edited by

இரு தரப்புகளும் தற்போது கல்வான் பகுதியிலிருந்து பின் வாங்கியுள்ளன

Highlights

  • முன்னதாக 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு எனத் தகவல் சொல்லப்பட்டது
  • சீனத் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது
  • சீனாவின் செயலே இந்த சம்பவத்திற்குக் காரணம் என இந்தியா குற்றச்சாட்டு

இந்திய - சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வத் தகவலை தெரிவித்துள்ளது.

ராணுவத்தின் முழு அறிக்கை இதோ:

‘இந்திய மற்றும் சீனத் துருப்புகள், கல்வான் பகுதியில் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் மோதலில் ஈடுபட்டன. இந்த உரசல் போக்கினால், பதற்றமான சூழலில் பணியில் இருந்த 17 இந்திய ராணுவ வீரர்கள், மிகவும் உயரமான பகுதியில் குறைவான வெப்பநிலை கொண்ட இடத்தில் காயமுற்றனர். அவர்கள் மரணமடைந்துள்ளார்கள். இதன் மூலம் இந்த மோதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இந்திய ராணுவம், நாட்டின் இறையாண்மையையும் நில உரிமையையும் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. இரு தரப்புகளும் தற்போது கல்வான் பகுதியிலிருந்து பின் வாங்கியுள்ளன' என்று கூறியுள்ளது ராணுவம். 

Advertisement