Hyderabad: ஐதராபாத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் 2 பேர் குற்றவாளி என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்ற மூவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முகமது அக்பர் இஸ்மாயில் சௌத்ரி மற்றும் அனீக் ஷஃபீ சயீத் ஆகிய இருவரும் இந்த வழக்கில் குற்றவாளிகள் என்று நிரூபிருக்கப்பட்டுள்ளது. ஃபரூக் ஷர்ஃபுதீன் தர்காஷ், முகமது சாதிக் இஸ்ரார் அஹ்மத் ஷேக், தரிக் அஞ்சும் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நம்பள்ளியில் இருக்கும் நீதிமன்ற வளாகத்துக்கு, பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி 5 பேரும் அழைத்து வரப்படவில்லை.
இந்த வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 27 ஆம் தேதியே தீர்ப்பு வழங்கப்பட இருந்தது. ஆனால், வழக்கின் தீர்ப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தெலுங்கானா காவல் துறை நடத்தியது. குற்றம் சாட்டப்பட்ட ஐவரும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்படப்பட்டது.
வழக்கின் போது, ரியாஸ் பத்கல், முகமது அக்பர் இஸ்மாயில் சௌத்ரி மற்றும் அனீக் ஷஃபீ சயீத் அகியோர்தான் குண்டு வைத்தனர் என்று வாதிடப்பட்டது.
2007 ஆம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த அடுத்த நாள், 19 இடங்களில் வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.