Read in English
This Article is From Oct 11, 2018

பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம்; தேடப்பட்டு வந்த நபர் கேரளாவில் கைது

ஜூன் மாதம் 25ம் தேதி 2008ம் ஆண்டு பெங்களூருவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 2பேர் உயிரிழந்தனர். 20 படுகாயமடைந்தனர்.

Advertisement
தெற்கு

கைது செய்யப்பட்டிருக்கும் நபர் இந்தியன் முஜாஹய்தீன் தீவிரவாதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Bengaluru:

2008ம் ஆண்டு பெங்களூருவில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் சந்தேகிக்கப்பட்ட நபர் இத்தனை ஆண்டுகளாக தப்பித்து வந்த நிலையில், இன்று கேரள மாநிலம் கன்னூர் மாவட்ட காட்டினில் பிடிபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபரின் பெயர் சலீம்(42), அவர் இந்தியன் முஜாஹய்தீன் தீவிரவாதியாக இருக்கலாம் என்று கூறினர்.

இதுகுறித்து கூடுதல் காவல் ஆணையாளர் அலோக் குமார் பிடிஐ-க்கு அளித்த பேட்டியில், கேரளாவில் ஒருவரை கைது செய்துள்ளோம். அவரை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தி, போலீஸ் விசாரணைக்கு அனுமதி கேட்போம். விசாரணைக்கு பிறகுதான் எதுவும் சொல்ல முடியும் என்று கூறியுள்ளார்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 32 பேர் மீது சந்தேகம் இருந்து வந்தது. இறுதியாக சலீமை தொடர்ந்து கண்காணித்ததில் அவர்தான் குற்றவாளியாக இருக்க வேண்டுமென்று எண்ணி, கன்னூர் மாவட்டத்தில் கைது செய்துள்ளேம் என்று குமார் கூறினார்.

Advertisement
Advertisement