This Article is From Jun 14, 2018

முதல் வெற்றி ரஷ்யாவுக்கே - ஆரூடம் சொன்ன பூனை

மாஸ்கோ: ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் இன்று  தொடங்குகின்றது

முதல் வெற்றி ரஷ்யாவுக்கே - ஆரூடம் சொன்ன பூனை

Achilles, a white and deaf cat, was chosen as the official "animal oracle" for the FIFA World Cup (AFP)

ஹைலைட்ஸ்

  • 2010 ஃபிஃபா வெற்றியாளரை சரியாக கணித்தது ஆக்டபஸ் பால்
  • எந்த அணியின் கொடி உள்ள பாத்திரத்தை பூனை தொடுகிறதோ அதுவே வெற்றியாளர்.
  • இன்றைய வெற்றியாளர் ரஷ்யா என பூனை கணித்துள்ளது
Moscow:

மாஸ்கோ: ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் இன்று  தொடங்குகின்றது. முதல் போட்டியில் ரஷ்ய - சவுதி அரேபிய அணிகள் மோத உள்ளன.

கடந்த எட்டு மாதங்களாக சிறப்பாக விளையாடாத ரஷ்ய அணிக்கு, இந்த போட்டி மிகவும் முக்கியமானது.  ஃபிஃபா உலக கோப்பையின் முதல் போட்டியில் ரஷ்ய அணி வெற்றி பெரும் என்று ஆரூடம் கூறியிருக்கிறது அச்சில்ஸ் என்கிற பூனை.

காது கேளாத அந்த பூனை, இந்த ஆண்டு உலக கோப்பை தொடருக்கான வெற்றிகளை கணிக்கும் அதிகாரப்பூர்வ விலங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய போட்டியின் வெற்றியாளர் யார் என்ற கணிப்பில், ரஷ்ய நாட்டு கொடியைக் கொண்ட உணவு பாத்திரத்தை பூனை தேர்ந்தெடுத்தது..

செயிண்ட் பீட்டஸ்பர்க் ஹெர்மிடேஜ் அருங்காட்சியத்தில் உள்ள எலிகளை விரட்டும் பூனையாக இருந்த அச்சில்ஸுக்கு, ஆருடம் சொல்லும் யோகம் அடித்துள்ளது

கடந்த 2010 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் வெற்றியாளரை கணித்த ஆக்டபஸ் பால் உலக பிரபலம். அதற்கு பின் கினியாவின் பன்றி, பிரிட்டனின் பிரானா என விலங்குகள் கணித்திருந்தாலும், ஆக்டபஸ் பெற்ற புகழை யாரும் பெறவில்லை. ஆக்டபஸ் பாலின் வழியில் தற்போது அச்சில்ஸ் பயணிக்க தொடங்கியுள்ளது.

.