This Article is From Dec 27, 2018

டாப் 10 விளையாட்டு வீரர்கள் 2018

2018 விளையாட்டு அரங்கில் ஒரு சிறந்த ஆண்டாகவே இருந்தது

டாப் 10 விளையாட்டு வீரர்கள் 2018

2018 இல் விளையாட்டு உலகை கலக்கியவர்கள்

2018 விளையாட்டு அரங்கில் ஒரு சிறந்த ஆண்டாக்வே இருந்தது. சர்வதேச போட்டிகள் பல நடந்தன. காமன்வெல்ட் போட்டிகள், ஆசிய போட்டிகள் என பல நடந்தன. 2018 இல் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கிய வீரர்களை பின் வருமாறு காண்போம்.

 

கிரிக்கெட்

விராட் கோலி

t0vct7v8

2018 ஆம் ஆண்டிலும் கிரிக்கெட் உலகில் கிங்காக வலம்வருகிறார் விராட் கோலி. டாப் 4 என கிரிக்கெட் உலகில் அழைக்கபடுபவர்கள் ஸ்டிவன் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் மற்றும் விராத் கோலி. இவர்களில், இந்த வருடம் ஸ்டிவன் ஸ்மித் கிரிக்கெட் விளையாட தடை செய்யபட்டார். ஜோ ரூட் போட்டிகளில் 50+ ரன்கள் எடுத்தாலும் அதை சதமாக மாற்ற திணறினார். வில்லியம்சன் அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. மறுபக்கம், கோலி தென் ஆப்ரிக்காவில் சதம், இங்கிலாந்தில் சதம் இப்போது ஆஸ்திரேலியாவில் சதம் என சூப்பர்மேன் மாதிரி விளையாடி வருகிறார். டெஸ்டுகளில் இதுவரை 1322 ரன்கள், ஒரு நாள் போட்டிகளில் 1200 ரன்கள் டி20 இல் 211 ரன்கள் என ரன் வேட்டை நடத்தி வருகிறார் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி.

 

கால்பந்து

மெஸ்ஸி & ரொனால்டோ

u7no2c7

மோ சாலா, லூக் மோட்ரிக் என பல திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தாலும், கால்பந்து உலகின் மன்னர்களாக இந்த வருடமும் திகழ்கின்றனர் மெஸ்ஸியும் ரொனால்டோவும். ஸ்பெயின் நாட்டில் உள்ள லா லிக்காவில் விளையாடி வருகிறார் மெஸ்ஸி . ரொனால்டோ, லா லிக்காவில் இருந்து சீரிஸ் A க்கு மாறியுள்ளார். இருவரின் தேசிய நாடுகள் உலக கோப்பையில் சொதப்பினாலும் உள்ளூர் போட்டிகளில் சாதனை மேல் சாதனை செய்து வருகிறார்கள் இந்த ஜாம்பவன்கள். தேசிய அணிக்கும் உள்ளூர் அணிக்கும் சேர்த்து 54 போட்டிகளில் 51 கோல்கள் அடித்துள்ளார் மெஸ்ஸி. ரொனால்டோ 51 போட்டிகளில் 46 கோல்கள் அடித்துள்ளார். இந்த வருடத்தின் பாலன் டி ஓர் விருதை லூக் மோட்ரிக் பெற்றிருந்தாலும் இந்த இருவரும் கால்பந்து களத்தில் செய்யும் மேஜிக்கிற்கு ஈடுகொடுக்க முடியாது.

 

டென்னிஸ்

நோவக் ஜொக்கோவிக்

pvb50ln8

இந்த வருடம், நடந்த நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றை ரோஜர் பெடரர், மற்றோன்றை நடாலும் மீதி இரண்டை நோவக் ஜொக்கோவிக்கும் வென்றனர். 2017 காயம் காரணமாக அதிக போட்டிகளில் பங்கேற்காத நோவக், இந்த ஆண்டு கம்பேக் ஆண்டாக அமைந்தது. ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாமில் சொதப்பினாலும், கடைசி இரண்டு கிராண்ட்ஸ்லாமில் தன் திறமையை நிருபித்து சாம்பியன் ஆனார். விம்பிள்டன் மற்றும் யூ.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம்களை தனக்குரியது ஆக்கிய பின் ATP பைனல் போட்டியில் இறுதி போட்டி வரை முன்னேறி இரண்டாவது இடம் பெற்றார்.

 

கார் பந்தயம் ( F1 )

ஹாமில்டன்

0rn7vjgg

F1 இல் இந்த ஆண்டும் சாம்பியன் லூயிஸ் ஹாமில்டன். இந்த ஆண்டு நடந்த 21 கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளில் 11 கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளில் முதல் இடன் பெற்று நான் தான் கார் ரேஸ்ஸில் கிங் என நிருபித்தார். ஹாமில்டன்க்கு கடும் போட்டி அளித்தவர் பெராரி அணியை சேர்ந்த வெட்டல். மெர்ஸிடிஸ் அணியின் காரை ஓட்டிய ஹாமில்டன், மொத்தம் 408 புள்ளிகள் பெற்றார். இரண்டாவதாக வெட்டல் 320 புள்ளிகளே பெற்றார். இது ஹாமில்டன் வென்ற 5 வது சாம்பியன்ஷிப் ஆகும். ஷுமாக்கரின் 7 சாம்பியன்ஷிப்களே இது வரை சாதனையாக இருந்து வருகிறது. ஹாமில்டன் அதனை முறியடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

 

பைக் பந்தயம் (Moto GP)

மார்க் மார்க்வஸ்

oujqn5oo

ரோஸி vs டொவிசியோசோ vs மார்க்வஸ் என மும்முனை போட்டியாக துவங்கிய மோட்டோ  GP யில் கடைசியாக வென்றவர் மார்க் மார்க்வஸ். ஹோண்டாவிற்காக களமிறங்கிய மார்க்வஸ், 9 கிராண்ட்பிக்ஸ்களை வென்று, 321 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப்பை தனக்குரியது ஆக்கினார். டாக்டர் என அழைக்கபடும் ரோஸி, இந்த ஆண்டு ஒரு கிராண்ட்பிரிக்ஸையும் வெல்லாமல் ஏமாற்றம் அடைந்தார். 25 வயதான மார்க்வஸ் வெல்லும் 5 வது சாம்பியன்ஷிப் இதுவாகும்.

 

கூடைபந்து

லெப்ரான் ஜேம்ஸ்

n4p59eng

2018 ஆம் ஆண்டு, லா லேக்கர்ஸ் அணிக்கு விளையாட ஒப்பந்தமானார் லெப்ரான் ஜேம்ஸ். கொபி பிரயண்ட் ஓய்வு பெற்ற பின் தடுமாறி வந்த லா லேக்கர்ஸ் அணிக்கு புது புத்துணர்ச்சி அளித்துள்ளார் ஜேம்ஸ். கெவின் டியூரண்ட், ஸ்டிபன் கரி என சமகால வீரர்கள் இருந்தும் தனக்கான தனி இடத்தை ஜேம்ஸ் பெற்றுள்ளார்.

 

பேட்மின்டன்

பி.வி.சிந்து

mqelm788

நன்றாக விளையாடினாலும், பைனல் போட்டியில் ஜெயிக்க முடியாமல் திணறிவருகிறார் சிந்து என பல காலமாக அவர் மீது விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக பேட்மின்டன் உலக பைனல் போட்டியில் சாம்பியன் ஆகியுள்ளார். காமன்வெல்ட் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெள்ளி, கலப்பு குழு போட்டியில் தங்கம், ஆல் இங்கிலாந்து போட்டியில் அரையிறுதி என சாதனைகளை தன்ககுரியது ஆக்கினார் சிந்து. சாய்னாவிற்கும் 2018 சிறந்த ஆண்டாக இருந்தது. காமன்வெல்ட் போட்டியில் ஒற்றையர் பிரிவில் தங்கம், ஆசிய போட்டியில் வெண்கலம் என சாய்னா வென்றாலும்  பேட்மின்டன் உலக பைனல் போட்டியில் சாம்பியன் ஆகி இது என்னுடைய ஆண்டு என நிருபித்தார் சிந்து.

 

ஹாக்கி

ஆஸ்திரேலியா ஆண்கள் அணி

6tsedrj8

ஹாக்கியில் தங்களது கோட்டை என ஒவ்வொரு போட்டியிலும் நிருபித்து கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா அணி. சாம்பியன்ஸ் டிராபியில் தங்கம், காமன்வெல்ட் போட்டியில் தங்கம் சுல்தான் ஆசான் போட்டியில் தங்கம் என வெற்றி மேல் வெற்றி பெற்றது. ஆனால் உலக கோப்பை போட்டியில் அரையிறுதியில் பெனால்டியில் நெதர்லாந்திடம் தோற்று வெண்கலம் வென்றது.

 

தடகளம்

மைக்கேல் நார்மேன்

qidaj37g

அமெரிக்காவில் இருந்து மற்றுமொரு சாம்பியன். 20 வயதான நார்மேன் தான் இனி தடகளத்தில் சாதனைகளை செய்ய போகிறார் என கூறலாம். இன்னும் சர்வதேச அரங்கில் தடம் பதிக்க இருந்தாலும், ஜூனியர் பிரிவில் இவர் தான் ராஜா. உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் 200 மீட்டர் மற்றும் 4x100 மீட்டரில் தங்கம் என தன் திறமையை நிருமித்த நார்மேன், 2018 இல் 400 மீட்டரில் அதி வேகமாக ஓடியவர் என்ற சாதனையின் சொந்தகாரர். கூடிய சீக்கிரம் சர்வதேச அரங்கிலும் தன் திறமையை காட்ட உள்ளார்.

 

எம்.எம்.ஏ

டானியல் கார்மியர்

mid26i2

இரத்தமும் வீரமும் நிறைந்த எம்.எம்.ஏ உலகின் அதிக பணம் உலாவும் இடம். 3-0 என வெற்றி மட்டுமே கண்டுள்ள கார்மியர் தான் இந்த ஆண்டின் சிறந்த எம்.எம்.ஏ வீரர். டெரிக் லூயிஸ், மியோசிக் என பல வலிமையான போட்டியாளர்களை வீழ்த்தி லைத்வேயித் மற்றும் ஹெவிவேயித் என இரு பிரிவிலும் சாம்பியன் என்ற பெருமைக்கு சொந்தகாரர் இவர்.

.