பெரும் எதிர்ப்பார்ப்பு மத்தியில், 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார். வரும் மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி இல்லாத நிலையில், இடைக்கால நிதி அமைச்சரான பியூஸ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில், குறிப்பிடத்தக்க வகையில் 10 முக்கியமசங்கள் இதோ...
1. பிரதமரின் கிசான் யோஜனா திட்டம் மூலம், சிறிய விவசாயிகளுக்கு ஓர் ஆண்டுக்கு ரூ.6000 கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு ஹெக்டேர் நிலப்பரப்புள்ள அல்லது அதற்கு குறைவாக உள்ள சிறிய விவசாயிகள் நன்மை அடைவார்கள்.
2. தனிநபர் வருமான வரிக்கான உச்சவரம்பே இந்த பட்ஜெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில், வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருமான வரி செலுத்தும் 3 கோடி நடுத்தர மக்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. ஆண்டு வருமானம் ரூ. 6.5 லட்சமாக உள்ளவர்கள் ரூ. 1.5 லட்சத்தை குறிப்பிட்ட சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை.
3. வங்கி வட்டியில் இருந்து வருமானத்துக்கு தனியாக 50 ஆயிரம் ரூபாய் விலக்கு அளிக்கப்படும்.
4. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 12 கோடி பேர் பயன் பெறுவர்.
5. பி.எப் சந்தாதாரர்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரண நிதி ரூ. 6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
6. வரும் மார்ச் மாதத்துக்குள் நாடுமுழுவதும் அனைத்து வீடுகளுக்கும் சவுபாக்கியா திட்டத்தின் கீழ் மின் வசதி.
7. வீட்டு வாடகை கழிவுக்கான உச்ச வரம்பு ரூ. 1.80 லட்சத்தில் இருந்து ரூ. 2.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
8. 2வது வீடு வாங்குபவர்களுக்கும் வருமான வரியில் சலுகை வழங்கப்படும்.
9. வங்கி வட்டியில் இருந்து வருமானத்துக்கு தனியாக 50 ஆயிரம் ரூபாய் விலக்கு அளிக்கப்படும்
10. 22 விவசாய பொருட்களின் ஆதார விலை 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.