Read in English
This Article is From May 14, 2019

வாக்குச்சாவடியில் தாமரைச் சின்னத்தை அழுத்தும் படி நிர்பந்திக்கப்பட்டேன்: பெண் பேட்டி

மே.19ல் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதற்கு முக்கிய காரணமான செயல்பட்டவர் உட்பட அவருக்கு உதவி செய்த 3 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Edited by
Faridabad (Haryana):

6வது கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், டெல்லி அருகே ஃபரிதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைச் சின்னத்தை அழுத்துங்கள் என 3 பெண் வாக்காளர்களை நிர்பந்தித்த பூத் ஏஜெண்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதைத்தொடர்ந்து, ஜாமினில் விடுவிக்கப்பட்ட கிரிராஜ் சிங் என்ற அந்த பூத் ஏஜெண்ட் கூறும்போது, படிக்காத பெண்களுக்கு தங்கள் வாக்குகளை செலுத்துவதற்கு உதவி மட்டுமே செய்தேன் என்றும் தன் மீதான குற்றச்சாட்டை முற்றிலும் அவர் மறுத்தார். 

முன்னதாக, இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதும், ஹரியானா தேர்தல் ஆணையத்திற்கும் கவனத்திற்கும் சென்றது. இதைத்தொடர்ந்தே, பூத் ஏஜெண்ட் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இதுகுறித்து வெளியான வீடியோவில், ஃபரிதாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில், நீல நிற சட்டை அணிந்த நபர் ஒருவர் மேஜையில் அமர்ந்திருக்கிறார். பெண் வாக்காளர்கள் வரிசையில் அறைக்குள் நிற்கின்றனர். ஒரு பெண் வாக்களிக்க செல்லும் போது அவரது அருகில் சென்று இந்த பொத்தானை அழுத்துங்கள் என அந்த நபர் நிர்பந்திக்கிறார். இதேபோன்று மேலும், 2 பெண்களிடம் அவர் நிர்பந்திக்கிறார். 

Advertisement

அந்த வீடியோவில், வாக்களிக்கும் இடத்திற்கு செல்லும் பூத் ஏஜெண்ட்டை வேறு எந்த அதிகாரிகளும் தடுத்து நிறுத்தவில்லை. இதையடுத்து, ஹரியானா தேர்தல் ஆணையத்திற்கு பலரும் அந்த வீடியோவை டேக் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதுகுறித்து தீர விசாரித்த தேர்தல் ஆணையம், அந்த குற்றச்சட்டு உண்மை என்பதை உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து, அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் மே.19ஆம் தேதி மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக வெளியான வீடியோவில் உள்ள ஒரு பெண்ணிடம் பேசியபோது, அந்த பெண் பூத் ஏஜெண்ட் தன்னை நிர்பந்தித்ததை உறுதிப்படுத்தினார். மேலும், அவர் தாமரைச் சின்னத்தை அழுத்தும் படி நிர்பந்தித்துள்ளார் எனினும், அந்த பெண் அது எனது விருப்பம் நான் எதற்கு வேண்டுமானாலும், வாக்களிப்பேன் என்று தெரிவித்துவிட்டதாக கூறியுள்ளார். 

Advertisement

மேலும், விரைவாக வீட்டிற்கு செல்ல வேண்டிய அவசியம் இருந்ததால், வாக்குச்சாவடியில் நடந்த சம்பவம் குறித்து தான் யாரிடமும் புகார் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

எனினும், பூத் ஏஜெண்ட் கிரிராஜ் கூறும்போது, வாக்கு எந்திரம் அருகில் சென்றால் தேர்தல் வீதி மீறல் என்பது எனக்கு தெரியாது. நான் அந்த பெண்களுக்கு உதவி செய்ய மட்டுமே முயற்சித்தேன். ஃபரிதாபாத் மக்களவைத் தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அங்கு 2 வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது. அந்த கிராமத்து பெண்கள் பெரும்பாலானோர் படிக்காதவர்கள், படித்தவர்களுக்கே வாக்கு எந்திரத்தை கையாழுவதில் சற்று குழுப்பம் நிலவும், அந்த பட்சத்திலே நான் அவர்களுக்கு உதவி செய்தேன் என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement