This Article is From Feb 19, 2019

2019ன் மிகப்பெரிய நிலவு இன்று அமெரிக்காவில் தோன்றும்!

சூப்பர் ஸ்னோ மூன், 'மிட் வின்டர் மூன்' அல்லது 'ஹங்கர் மூன்' என அழைக்கப்படும் ஒரு விண்வெளி நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது.  நிலவு பூமிக்கு மிக அருகில் வரும் நிகழ்வு இன்று நிகழவுள்ளது.

2019ன் மிகப்பெரிய நிலவு இன்று அமெரிக்காவில் தோன்றும்!

சூப்பர் ஸ்னோ மூன்: நிலவு மிகப்பெரிய அளவிலும், மிகப்பிரகாசமாகவும் வானில் தெரியும் என்று கூறப்பட்டுள்ளது.

New Delhi:

சூப்பர் ஸ்னோ மூன், 'மிட் வின்டர் மூன்' அல்லது 'ஹங்கர் மூன்' என அழைக்கப்படும் ஒரு விண்வெளி நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது.  நிலவு பூமிக்கு மிக அருகில் வரும் நிகழ்வு இன்று நிகழவுள்ளது. இந்த நிலவு மிகப்பெரிய அளவிலும், மிகப்பிரகாசமாகவும் வானில் தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. பூமிக்கு அருகில் நிலவு இருக்கும் தொலைவை 'பெரிஜி' என்று குறிப்பிடுவார்கள். இந்த வாரம் அது 583 கிமீ தொலைவாக உள்ளது. இந்த வருடத்தில் மட்டும் 4 சூப்பர் மூன்களுக்கு வாய்ப்புள்ளதாம். 

ஏன் குளிர்காலத்தில் வரும் நிலவை ஹங்கர் மூன் என்கிறோம் என்ற விளக்கத்தை நாசா அளித்துள்ளது. இந்த காலத்தில் அமெரிக்காவில் அதிக பனிப்பொழிவு நிலவும். அதனால் இதனை ஸ்னோ மூன் அல்லது ஹங்கர் மூன் என்கிறார்கள் என்று கூறியுள்ளது.

ஸ்னோ மூன் நேரங்கள்: பிப்ரவரி 19, 2019ல் இந்த நிகழ்வு நடக்கும். இந்திய நேரப்படி இரவு 9:30க்கு அமெரிக்க பகுதிகளில் தெரியும்.

அடுத்த சூப்பர் மூன் மார்ச் 20ம் தேதி தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அது இன்று தெரியுமளவுக்கு பெரியதாக இருக்காது என்று கூறப்பட்டுள்ளது

.