Read in English
This Article is From Aug 01, 2020

பஞ்சாபில் கள்ளச் சாராயத்திற்கு 21 பேர் பலி! உயர்மட்ட விசாரணைக்கு முதல்வர் உத்தரவு!!

முதல் ஐந்து இறப்புகள் ஜூலை 29 அன்று அமிர்தசரஸ் தர்சிகாவில் உள்ள முச்சால் மற்றும் டாங்ரா கிராமங்களில் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • கள்ளச் சாராயம் குடித்ததன் காரணமாக மாநிலம் முழுவதும் 21 பேர் உயிரிழப்பு
  • முதலமைச்சர் அமரீந்தர் சிங் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்
  • அமிர்தசரஸ், படாலா மற்றும் டார்ன் தரன் மாவட்டங்களில் இந்த இறப்புகள் பதிவு
Chandigarh :

நாடு முழுவதும் கொரோனா நெருக்கடி காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலத்திலும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மதுபானக்கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளச் சாராயம் குடித்ததன் காரணமாக மாநிலம் முழுவதும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக முதலமைச்சர் அமரீந்தர் சிங் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

“அமிர்தசரஸ், குர்தாஸ்பூர் மற்றும் டார்ன் தரன் ஆகியவற்றில் சந்தேகத்திற்கிடமான போலி மதுபானங்கள் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். கமிஷனர், ஜலந்தர் பிரிவு விசாரணையை நடத்தி சம்பந்தப்பட்ட எஸ்எஸ்பி மற்றும் பிற அதிகாரிகளை ஒருங்கிணைப்பார். குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட எவரும் காப்பாற்றப்பட மாட்டார்கள்.” என அமரீந்தர் சிங் டிவிட் செய்துள்ளார்.

புதன்கிழமை இரவு முதல் அமிர்தசரஸ், படாலா மற்றும் டார்ன் தரன் மாவட்டங்களில் இந்த இறப்புகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.

முதல் ஐந்து இறப்புகள் ஜூலை 29 அன்று அமிர்தசரஸ் தர்சிகாவில் உள்ள முச்சால் மற்றும் டாங்ரா கிராமங்களில் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

பஞ்சாப் மாநிலத்தில் தற்போது 15,456 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement