Read in English
This Article is From Mar 15, 2019

3 தொகுதி இடைத்தேர்தல் : திமுக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து திமுக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ம்தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது.

New Delhi:

3 தொகுதிகள் இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 2 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ம்தேதி நடைபெறுகிறது. அத்துடன் தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 21 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக, மொத்தம் உள்ள 21 தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு எஸ்.ஏ. பாப்டே மற்றும் எஸ்.ஏ.நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 

அப்போது திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வி ஆஜர் ஆனார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்னும் 2 வாரத்திற்குள் இந்த விவகாரம் குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். 

Advertisement

ஒட்டப்பிடாரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சுந்தர ராஜ் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரவக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி தற்போது திமுகவில் சேர்ந்துள்ளார். திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இந்த 3 தொகுதிகளையும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 21 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. 

Advertisement