This Article is From Jun 18, 2020

தமிழகத்தில் புதிதாக 2,141 பேருக்கு கொரானா! மொத்த பாதிப்பு 52 ஆயிரத்தை தாண்டியது

சென்னையில் மட்டும் இன்று 1,373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அவர்களை தவிர்த்து செங்கல்பட்டு 115, காஞ்சிபுரம் 55, திருவள்ளூர் 123 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் புதிதாக 2,141 பேருக்கு கொரானா! மொத்த பாதிப்பு 52 ஆயிரத்தை தாண்டியது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 625 ஆக உயர்ந்துள்ளது. 

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் இன்று 2141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
  • மொத்த பாதிப்பு தமிழகத்தில் 52 ஆயிரத்தை தாண்டி விட்டது
  • கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 49 பேர் உயிரிழந்தனர்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து  334 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்புகள் மற்றும் டிஸ்சார்ஜ்  ஆனவர்களை தவிர்த்து தமிழகத்தில் தற்போது  23,065 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை எடுத்து வருகின்றனர். 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 26,736 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 2,141 பேரில் 1,280 பேர் ஆண்கள், 861 பேர் பெண்கள் ஆவர்.

கொரோனா பாதிப்பை கண்டறிவதற்காக தமிழகத்தில் 45 அரசு மற்றும் 36 தனியார் என மொத்தம் 81 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 

இன்று மட்டும் 1,017 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து  மீண்டவர்களின் எண்ணிக்கை 28,641 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 13 பேர் தனியார் மருத்துவமனையிலும், 36 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 

.