Read in English
This Article is From Jan 12, 2019

ஏலத்துக்கு வரும் 218 வருடங்களுக்கு முந்தைய‌ அமெரிக்க கடிதம்

''என் உயிர் நண்பரே, சிறிய கருத்து வேறுபாடுகளை தியாகம் செய்ய கற்றுக்கொள்ளவில்லையெனில், நாம் இருவராலும் இணைந்து செயல்பட முடியாது. எல்லோரும் ஒரே வழியைதான் பின்பற்றுவார்கள் என்று கூற முடியாது'' என்று ஜெஃபர்ஸன் எழுதியுள்ளார்.

Advertisement
உலகம் (c) 2019 The Washington Post

தமஸ் ஜெஃபர்ஸன், அமெரிக்காவின் மூன்றாவது அதிபராக இருந்தார்.

218 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கடிதம் ஒன்று அமெரிக்காவின் தற்போது உள்ள சூழலுக்கு பொருத்தமாக வெளியாகியுள்ளது. 1801ம் ஆண்டு புதிய அதிபராக பதவியேற்ற தாமஸ் ஜெஃபர்ஸன் தனது தந்தையும், முன்னாள் அதிபருமான ஜான் டிக்கின்ஸனுக்கு எழுதிய கடிதம் தான் அது.

போடோமேக்(Potomack) கம்பெனியிடம் இருந்த இந்தக் கடிதம், இரு அதிபர்களுக்கு இடையே எழுதப்பட்டது. இந்தக் கடிதம் தற்போது முடங்கியிருக்கும் அரசுக்கும் பொருந்தும் விதமாக உள்ளதுதான் ஆச்சரியம்.

அந்த கடிதத்தில் ''என் உயிர் நண்பரே, சிறிய கருத்து வேறுபாடுகளை தியாகம் செய்ய கற்றுக்கொள்ளவில்லையெனில், நாம் இருவராலும் இணைந்து செயல்பட முடியாது. எல்லோரும் ஒரே வழியைதான் பின்பற்றுவார்கள் என்று கூற முடியாது'' என்று ஜெஃபர்ஸன் எழுதியுள்ளார். அன்று நிலவிய அரசியல் திருப்பங்கள் குறித்து அந்தக் கடிதத்தில் இடம் பெற்றுள்ளது. இருவரும் இணைந்து முடிவுகளை எடுக்காவிட்டால் நாம் இணைக்கப்படாத தனிநபர்களாகவே இருப்போம் என்றும் கூறியிருக்கிறார்.

போடோமேக் நிறுவனத்தின் சிஇஓ எலிசபெத் ''ஜெஃபர்ஸனின் கடிதம் கண்டு வியப்படைந்தோம். ஆனால் இதனை எங்கள் விருப்பத்தின் பெயரில் தான் தேந்தெடுத்தோம். தற்போது உள்ள அரசியல் சூழலை அது பிரதிபலிக்கிறது என்பது ஆச்சர்யமே" என்றார். 

Advertisement

இந்தக் கடிதம் 18,000 முதல் 25,000 அமெரிக்க டாலர் வரை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement