கடந்த ஜூன் மாதம், ஊழல் புகார் சுமத்தப்பட்டிருந்த 27 ஐ.ஆர்.எஸ் உயர் அதிகாரிகளுக்குக் கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது.
New Delhi: வருமான வரித் துறையைச் சேர்ந்த 22 மூத்த அதிகாரிகள் மீது ஊழல் புகார் இருந்ததாகவும் அதனால் அவர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர்தான் பிரதமர் நரேந்திர மோடி, ஒரு செய்தித் தாளுக்கு அளித்த பேட்டியில், “வரித் துறை நிர்வாகத்தில் சில கருப்பு ஆடுகள் இருக்கின்றன. அது குறித்து மத்திய அரசுக்கு நன்கு தெரியும்” என்று கூறியிருந்தார்.
இதைப் போல வடிகட்டும் நடவடிக்கை இந்திய வருவாய் சேவைத் துறையிலும் எடுக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம், ஊழல் புகார் சுமத்தப்பட்டிருந்த 27 ஐ.ஆர்.எஸ் உயர் அதிகாரிகளுக்குக் கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது.
சுதந்திர தினத்தின்போது தேசத்துக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இது குறித்து குறிப்பிட்டிருந்தார். தி எக்கனாமிக் டைம்ஸ் இதழுக்கு அளித்தப் பேட்டியிலும் தெரிவித்திருந்தார்.
“வரித் துறை நிர்வாகத்தில் இருக்கும் சில கருப்பு ஆடுகள், அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கின்றன. அவர்கள், முறையாக வரி செலுத்துவோர் மீது வேண்டுமென்றே நடவடிக்கை எடுத்துள்ளனர். சிறிய தவறிழைத்தவர்களுக்கு எதிராகவும் மிரட்டல் விடுக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதையொட்டித்தான், வரித் துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு நாங்கள் கட்டாய ஓய்வு கொடுத்தோம். என் அரசு, இதைப் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை விடாது” என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.