This Article is From Nov 21, 2018

ஒடிஸாவில் விவசாயிகளின் தற்கொலைக்கு கடன் தொல்லை காரணமில்லை - பிரதீப் மஹாரதி

நவம்பர் 1 பார்காக் மாவட்டத்தில் நடந்த தற்கொலையை போலீசார் விசாரித்து வருவதாகவும் கடன் தொல்லையால் அவர் இறந்ததாக இன்னும் தகவல் வெளியாகவில்லை எனக் கூறினார்

ஒடிஸாவில் விவசாயிகளின் தற்கொலைக்கு கடன் தொல்லை காரணமில்லை - பிரதீப் மஹாரதி
Bhubneswar:

ஒடிஸா அரசு சார்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கடந்த 5 ஆண்டுகளில் 227 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஒடிஸா சட்டமன்ற கூட்டத்தில் விவசாயிகளின் தற்கொலை குறித்து கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்த வேளாண் துறை அமைச்சர் பிரதீப் மஹாரதி ‘2013-2014 மற்றும் 2017-2018 ஆகிய ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலை என்பது 227 ஆக இருந்தது உண்மைதான் எனவும், இந்த முடிவுக்கு கடன் தொல்லைகள் காரணமில்லை என தனது கருத்தை எழுத்துப் பூர்வமாக தெரிவித்தார்'.

மேலும் அவர் பயிர் நாசம் ஆனதால் மட்டுமே பாலாசோர் மாவட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகவும் மேலும் சில விவசாயிகள் வீட்டு சூழ்நிலைகள் போன்ற பல வகை காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டதாகவும் பதில் அளித்தார்.

அத்துடன் 227 பேர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் கடந்த நவம்பர் 1 பார்காக் மாவட்டத்தில் நடந்த தற்கொலையை போலீசார் விசாரித்து வருவதாகவும் கடன் தொல்லையால் அவர் இறந்ததாக இன்னும் தகவல் வெளியாகவில்லை எனக் கூறினார்

.