New Delhi:
முகம் தெரியாத இரண்டு பேருக்கு ஏற்பட்ட மோதலில், 23வயது இளைஞர் உயிரிழப்பு.
சீலாம்பூர் பகுதியை சேர்ந்த சுஃபியான் என்றவருக்கும், ஜப்பராபத் புலியா பகுதியை சேர்ந்த பெயர் தெரியாத நபருக்கும் ஏற்பட்ட மோதலில், ஒருவர் உயிரிழப்பு.
இருவருக்கும் ஏற்பட்ட மோதலில், சுஃபியானை ஐஸ் எடுக்கும் கூர்மையான கருவியை வைத்து அந்த நபர் தாக்கியுள்ளார். இதில், கூர்மையான கருவி இருதயத்தை கிழித்ததில் 23 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார் என கிழக்கு டில்லி உதவி ஆணையர் அடுல் குமார் தாக்கூரி தகவல் தெரிவித்தார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சுஃபியான், இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.