This Article is From Mar 15, 2020

ஈரானில் சிக்கித்தவித்த 234 இந்தியர்கள் தாயகம் திரும்பினார் - வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

ஈரானில் இருந்து இந்தியர்கள் மூன்று பகுதிகளாக இந்தியா அழைத்துவரப்பட்டனர், அதில் இன்று அதிகாலை சிலர் இந்தியா வந்துள்ளனர்

ஈரானில் சிக்கித்தவித்த 234 இந்தியர்கள் தாயகம் திரும்பினார் - வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

தூதர் தமு கடாம் மற்றும், ஈரானிய அதிகாரிகளுக்கு உங்களின் இந்த முயற்சிக்கு மிக்க நன்றி

ஹைலைட்ஸ்

  • ஈரானிய அதிகாரிகளுக்கு உங்களின் இந்த முயற்சிக்கு மிக்க நன்றி
  • எஸ். ஜெய்சங்கர் தந்து ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
  • 44 இந்திய யாத்ரீகர்கள் ஈரானில் இருந்து வந்தனர்
New Delhi:

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஈரானில் சிக்கித் தவித்த இருநூற்று முப்பத்து நான்கு இந்தியர்கள் இந்தியா வந்துள்ளனர் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று தெரிவித்தார். இந்த குழுவில் 131 மாணவர்கள் மற்றும் 103 யாத்ரீகர்கள் உள்ளனர் என்றும் அவர் கூறினார். "ஈரானில் சிக்கித் தவித்த 234 இந்தியர்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர்; 131 மாணவர்கள் மற்றும் 103 யாத்ரீகர்கள் அதில் அடக்கம். மேலும் தூதர் தமு கடாம் மற்றும், ஈரானிய அதிகாரிகளுக்கு உங்களின் இந்த முயற்சிக்கு மிக்க நன்றி" என்று எஸ். ஜெய்சங்கர் தந்து ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

ஈரானில் இருந்து இந்தியர்கள் மூன்று பகுதிகளாக இந்தியா அழைத்துவரப்பட்டனர், அதில் இன்று அதிகாலை சிலர் இந்தியா வந்துள்ளனர். அதே போல கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுமார் 44 இந்திய யாத்ரீகர்கள் ஈரானில் இருந்து வந்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஈரானும் ஒன்றாகும், இந்நிலையில் அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு கொண்டுவருவதற்கான திட்டங்களில் இந்திய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

கடந்த செவ்வாய் அன்று 58 இந்திய யாத்ரீகர்கள் முதல் பகுதியாக ஈரானில் இருந்து இந்தியாவிற்கு திரும்பக் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

.