திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் 26 வயது தொண்டரான கயாம் மோல்லா சுட்டுக் கொலை செய்யப்பட்டார். (Representational)
Kolkata: மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நேற்று மாலை ஒரு மோதலில் பாஜக தொண்டர்கள் இருவரும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
கொல்கத்தாவிலிருந்து 70 கி.மீ தூரத்தில் நயாஜத்தில் இரவு 7 மணியளவில் மோதல் நடந்துள்ளது. ஹட்கச்சா என்ற பஞ்சாயத்து பகுதியில் கட்சிக் கொடிகள் அகற்றுவதில் சண்டை தொடங்கியுள்ளது.
அமைதியை பாதுகாக்கும் வகையில் அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஹட்காச்சியில் பாஜக திரிணாமூல் காங்கிரஸை விட 144 ஓட்டுகள் மட்டுமே அதிகம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் 26 வயதான தொண்டரான கயாம் மோல்லா சுட்டுக் கொலை செய்யப்பட்டார். பாஜக தொண்டர்களான பிரதீப் மோண்டல் மற்றும் சுகாந்தா மோண்டல் ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உள்ளூர் மக்களிடம் இதுகுறித்து பேசிய போது திரிணாமூல் காங்கிரஸ் வாக்குச் சாவடி அளவிலான கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளது. பல பாஜக தொண்டர்கள் பேச்சு கோபம் மற்றும் அவதூறுகள் வன்முறையை உருவாக்கியுள்ளதாக கூறுகின்றனர்.
பாஜகவினர் இந்த கொலைகளுக்கு காரணம் திரிணாமூல் காங்கிரஸ்தான் காரணம் என்று குற்றம் சாட்டி வருகிறது.
பாஜக கடந்த 6 ஆண்டுக்ளில் 54 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதற்கு காரணம் திரிணாமூல் காங்கிரஸ்தான் என்று குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி ‘உண்மையற்ற குற்றச்சாட்டு' என்று கூறி வருகிறார்.