மும்பையில் தனிமைப்படுத்தும் முகாமாக மாற்றப்பட்டுள்ள விளையாட்டு மைதானம்
ஹைலைட்ஸ்
- கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது
- ஒரே நாளில் 229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
- ஒரே நாளில் மட்டும் 25 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது
Mumbai: மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பால் 25 பேர் உயிரிழந்தனர். அத்துடன் புதிதாக 229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலத்தில் மொத்தம் 1,364 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. தலைநகர் மும்பையில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ளனர்.
ஒரே நாளில் பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் ஏற்பட்டிருப்பது மகாராஷ்டிராவில் மட்டும்தான் என அதிகாரிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக தமிழகம் உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 834 ஆக உயர்ந்திருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று ஒரே நாளில் மட்டும், 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேபோல், கொரோனா பாதித்து சிகிச்சைப் பெறுபவர்களில் 6 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த 2 வாரங்களுக்கு முன்பு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு கொரோனா கட்டுக்குள் வரவில்லை என்பதைத்தான் பாதிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.
இதனால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மறுதினம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.