This Article is From Sep 05, 2019

ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ரூ.180 பில் செலுத்தாத இளைஞர் அடித்துக்கொலை! - உரிமையாளர் கைது

இந்த சம்பவம் மகராஜ்கான்ஜ் என்ற பகுதிக்கு அருகில் உள்ள சர்தார் தாபாவில் ரூ.180 பில் தொகை செலுத்தாததில் ஏற்பட்டுள்ளது என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ரூ.180 பில் செலுத்தாத இளைஞர் அடித்துக்கொலை! - உரிமையாளர் கைது

ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Bhadohi:

உத்தர பிரதேசத்தில் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பில் செலுத்தாத காரணத்தினால் இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தர பிரதேசம் மாநிலம் பாதோகி மாவட்டத்தில், உள்ள ஹோட்டல் ஒன்றில் சுரஜ் சிங், விஷால் துபே ஆகிய இரண்டு இளைஞர்கள் இரவு உணவு உட்கொண்டுள்ளனர். பின்னர், உணவிற்கான பில் தொகை குறித்து ஹோட்டல் உரிமையாளருடன் அவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதில் ஆத்திரமடைந்த ஹோட்டல் உரிமையாளர் குர்மெயில் சிங், மற்றும் ஊழியர்கள் அந்த இளைஞர்களை கட்டைகளை வைத்தும், இரும்பு கம்பிகளை வைத்தும் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. 

இந்தசம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராம் பாதான் சிங் கூறும்போது, இந்த சம்பவம் மகராஜ்கான்ஜ் என்ற பகுதிக்கு அருகில் உள்ள சர்தார் தாபாவில், ரூ.180 பில் தொகை செலுத்துவதில் ஏற்பட்டுள்ளது.  பில் செலுத்துவது குறித்து 2 இளைஞர்களும் உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அந்த இளைஞர்களை ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். 

இந்த தாக்குதலின்போது, விஷால் துபே என்ற இளைஞர் மட்டும் தப்பியோடியுள்ளார். எனினும், அவர்கள் கையில் சிக்கிய சுரஜ் சிங்கை கம்பிகளை வைத்தும் கட்டைகளை வைத்தும் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சுரஜ் சிங் (25) உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக அந்த ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட 2 ஊழியர்கள் தலைமறைவு ஆகியுள்ளனர் என்று அவர் கூறினார். 

.