This Article is From Nov 26, 2018

26/11 : தீவிரவாதத்தினால் பல முனை தாக்குதலை எதிர்கொண்ட மும்பை

பத்து வருடங்களுக்கு முன்பு இதே நாளில் இந்தியாவில் நிதிசார் தலைநகரமான மும்பை மிக மோசமான் தீவிரவாத தாக்குதலை சந்தித்தது.

26/11 : தீவிரவாதத்தினால் பல முனை தாக்குதலை எதிர்கொண்ட மும்பை

மும்பை தாக்குதல்

பத்து வருடங்களுக்கு முன்பு இதே நாளில் இந்தியாவில் நிதிசார் தலைநகரமான மும்பை மிக மோசமான் தீவிரவாத தாக்குதலை சந்தித்தது. அணு ஆயுதங்களை கொண்ட 10 பேர் மும்பையை சூழ்ந்து தீவிரவாத தாக்குதலை நடத்தினார்கள்.

26/11 மும்பை தாக்குதல் லஷ்கர் -இ-தொய்பா என்ற தீவிரவாத குழுவால் நடத்தப்பட்டது. தீவிரவாதிகள் 10 பேர் கடல்மார்க்கமாக பாகிஸ்தானிலிருந்து மும்பை வந்தடைந்தனர். தொடர்ச்சியான துப்பாக்கிச்சூடு மற்றும் தொடர்குண்டு வெடிப்புகளை நிகழ்த்துவதற்காகவே திட்டமிட்டு வந்தடைந்தனர். தீவிரவாத தாக்குதல் நடந்த 4 நாட்களில் 166பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் அதிகமான பேர்கள் படுகாயமடைந்தனர்.

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்

மும்பையின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் குறிவைத்து தாக்குதலைத் தொடங்கினார்கள். தீவிரவாத தாக்குதல் நடந்த முதல் இடம் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில்தான். தீவிரவாதி அஜ்மல் அமீர் கஸாப் மற்றும் இஸ்மாயில் கான ஆகிய இருவரும் நடத்திய தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அதன்பின் கஸாப் மற்றும் கான் இருவரும் காமா மருத்துவமனையை சுற்றி வளைத்தனர். மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டதால் தாக்குதல் தவிர்க்கப்பட்டது. ஆனாலும் இந்த தாக்குதலில் காவல்துறையினரைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாத தடுப்பு பிரிவைச் சேர்ந்த ஹீமந்த் கர்கரே என்பவரும் இதில் கொல்லப்பட்டார்.

நாரிமன் ஹவுஸ் பிஸினஸ் (Nariman House business)

இரண்டாம் முனை தாக்குதல் நாரிமன் ஹவுஸ் பிஸினஸ் மற்றும் ரெஸிடென்ஸியல் காம்ப்ளக்ஸில் நடந்தது. அதில் ராபி, அவரின் மனைவி மற்றும் மேலும் 6 பேர் கொல்லப்பட்டனர். ராபியின் 2 வயது குழந்தையான பேபி மோஸே (Baby moshe) மட்டுமே இந்த தாக்குதலில் இருந்து உயிர் தப்பியது.

ஜூலை 2017 பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு சென்றிருந்த போது மோஸேவைத் சந்தித்தார். அதன்பின் 2018-ம் ஆண்டில் இஸ்ரேலின் அதிபர் பென்ஞ்சமின் நிடன்யகு மும்பை தாக்குதலில் இருந்து தப்பிய மோஸேவை நாரிமன் ஹவுஸில் வைத்து சந்தித்தார்.

லியோபோல்ட் கெஃபே

மூன்றாம் முனைத்தாக்குதல் லியோபோல்ட் கெஃபேயை தொடர்ந்து 5 நட்சத்திர ஹோட்டலான தாஜ் மஹால் ஹோட்டலில் தாக்குதல் நடைபெற்றது. தாஜ் ஹோட்டலில் நுழைந்த 4 தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தினார்கள். தீவிரவாதிகள் மூன்று நாட்கள் தங்களின் பிடியில் இந்த ஹோட்டலை வைத்திருந்தனர். அதில் 31 பேர் உயிரிழந்தனர்.

ஒபேராய் டிரினட் ஹோட்டல்

தாஜ் ஹோட்டலில் சுற்றி வளைத்த நேரத்தில் இரண்டு தீவிரவாதிகள் ஒபேராய் -டிரினட் ஹோட்டலில் (Oberoi Trident hotel)நுழைந்தனர். சரியாக 2 நாட்களுக்குப் பின்பே நவம்பர் 28 அன்று காவல்துறையினர் வசம் இந்த ஹோட்டல் வந்தது. இதில் நடந்த தக்குதலில் 30பேர் கொல்லப்பட்டனர்.

தெற்கு மும்பையில் உள்ள தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டலை கடைசியாக தேசிய பாதுகாப்பு படையினர் கைப்பற்றிய போது 160 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தீவிரவாதிகள் எப்படி உள் நுழைந்தனர்

பாகிஸ்தானின் துறைமுக நகரமான காரச்சியில் இருந்து மும்பைக்கு கடல்வழியாக வந்தடைந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. மும்பையில் உள்ள மீன்பிடிப் படகை கைப்பற்றி அதில் பணிபுரிந்த 5 பேர் கொண்ட குழுவில் 4 பேரை கொன்று அந்தப் படகை கைப்பற்றி மீதமுள்ள ஒருவரை வைத்து மும்பைக்குள் வந்தடைந்தனர்.

தாக்குதலுக்கு தண்டனை

இந்த தீவிரவாதிகளில் 9 பேர் மும்பை தாக்குதலையொட்டி இந்திய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். மீதமிருந்த ஒருவரான அஜ்மல் அமீர் கஸாப்பை கைது செய்தனர். அவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. புனேயில் உள்ள யர்வாடா மத்திய சிறைச்சாலையில் 2012ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தொடரும் விசாரணை

மும்பை தாக்குதலுக்கு காரணமாக கருதப்படும் ஜமாத்-உத்-தாவா என்ற தீவிரவாத குழுவின் மூளையாகச் செயல்படும் ஹஃபிஸ் சயித் இன்றளவும் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. ஹஃபிஸ் சயித்க்கு எதிரான விசாரணை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஹஃபிஸ் சயித்துக்கு உலக அளவில் பல தலைவர்கள் உதவி செய்வதாக இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. சிஐஏவின் முன்னாள் தலைவரும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் பிரதமரும் இதில் அடங்குவர் என இந்திய சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், முன்னாள் சிஐஏ இயக்குநர் டேவிட் ஹோவெல் பெட்ராஸிஸ் ஹஃபிஸ் சயித்துக்கும் மும்பை தாக்குதலில் முக்கிய பங்குண்டு என்பதை தெரிவித்துள்ளார். முன்னாள் ஆப்கானிஸ்தானின் அதிபர் ஹமித் கர்சா மும்பை தாக்குதலில் ஹஃபிஸ் சயித்துக்கு எதிரான ஆதாரங்கள் நிறைய உண்டு என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இன்றளவும் பாகிஸ்தான் அரசாங்கம் ஹஃபிஸ் சயித் குறித்த விசாரணையை நடத்திக் கொண்டு தான் இருக்கிறது. இன்று இது குறித்து அமெரிக்காவின் ஆர்.எஃப்.ஜே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மும்பை தாக்குதலுக்குக் காரணமானவர்களைப் பிடிக்க தகவல் கொடுப்பவர்களுக்கும் 5 மில்லியன் டாலர் வரை சன்மானம் வழங்கப்படும்' என்று கூறியுள்ளது.

இன்று நாடுமுழுவதும் மும்பை தாக்குதலில் இறந்தவர்களின் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு இந்தியா தீவிரவாதத்தை எதிர்க்க பல கொள்கை முடிவுகளை எடுத்துள்ளது. இந்நிகழ்விற்கு பின்பு தான் மெட்ரோ பாலிட்டன் நகரங்களில் தேசிய பாதுகாப்பு படைவீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது


 

.