This Article is From Mar 19, 2020

கடந்த 3 வருடங்களில் மட்டும் அசாம் தடுப்பு முகாமில் இருந்த 26 பேர் உயிரிழப்பு!

பிப்.27 2020 வரை அசாம் தடுப்பு முகாமில் 799 பேர் வைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் நித்தியானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 வருடங்களில் மட்டும் அசாம் தடுப்பு முகாமில் இருந்த 26 பேர் உயிரிழப்பு!

அசாம் தடுப்பு முகாமில் 799 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • அசாம் தடுப்பு முகாமில் இருந்த 26 பேர் உயிரிழப்பு!
  • உடல்நலக்குறைவு காரணமாக 26 பேர் உயிரிழந்ததாக தகவல்
  • அசாம் தடுப்பு முகாமில் 799 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
New Delhi:

அசாமில் கடந்த 3 வருடத்தில் மட்டும், தடுப்பு முகாமில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் நித்தியானந்த் ராய் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசும் போது நித்தியனாந்த் கூறியதாவது, அசாம் அரசு தெரிவித்துள்ள தகவல்படி, பிப்.27 2020 வரை அசாம் தடுப்பு முகாமில் 799 பேர் வைக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 3 வருடத்தில் மட்டும் உடல்நலக்குறைவு காரணமாக 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில், 2017ல் - 6 பேரும், 2018ல் - ஒன்பது பேரும், 2019ல் - பத்து பேரும், 2020ல் - ஒருவரும் என 26 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். 

தடுப்பு முகாமில் மூன்று ஆண்டுகளைக் கழித்தவர்களை நிபந்தனையின்றி ஜாமீனில் விடுதலை செய்ய 2019 மே மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து 175 பேர் தடுப்பு முகாம்களிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன. 

.