சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 131, மதுரையில் 97, திருவள்ளூரில் 87, திருச்சியில் 75 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் புதிதாக 2,865 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது
- மொத்த பாதிப்பு தமிழகத்தில் 67 ஆயிரத்தை தாண்டி விட்டது
- தென் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரிக்கிறது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 865 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 67 ஆயிரத்து 468 ஆக உயர்ந்துள்ளது.
இன்று சென்னையில் மட்டும் 1,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 814 ஆக அதிகரித்துள்ளளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் மொத்தம் 33 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,424 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 763 ஆக உயர்ந்துள்ளது.
குணம் அடைந்தவர்கள், உயிரிழந்தவர்களை தவிர்த்து தமிழகத்தில் தற்போது 28 ஆயிரத்து 836 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று உயிரிழந்த 33 பேரில் 8 பேர் தனியார் மற்றும் 25 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள்.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 131, மதுரையில் 97, திருவள்ளூரில் 87, திருச்சியில் 75 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.